Lirik Lagu Kannamma Santhosh Narayanan
தேனாக தேனாக வானூருதோ
கண்ணம்மா கண்ணம்மாகண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல்
தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ...
வான் பார்த்து ஏங்கும்
சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும்
சேறுண்டு வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
மீட்டாத வீணை
தருகின்ற ராகம்
கேட்காது பூங்கான்தலே
ஊட்டாத தாயின்
கணக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே
காயங்கள் ஆற்றும்
தலைக்கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே
தொடுவானம் இன்று
நெடுவானம் ஆகி
தொடும்நேரம் தொலைவாகுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா(கண்ணம்மா) கண்ணம்மா(கண்ணம்மா)
கண்ணிலே(கண்ணம்மா) என்னம்மா
post a comment